காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பன்னாட்டு தனியார் நிறுவன நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து போராடிய சிஐடியு மாநில தலைவர்கள் கண்ணன், முத்துக்குமார் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதைக் கண்டித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.