திருவாரூர்: பனங்குடி வேம்படி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, குழந்தைகள் பரதநாட்டியம் ஆடி இறைவனை வழிபட்டனர்.
நன்னிலம் அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் சுயம்புவாகத்தோன்றி அருள்பாலித்து வரும் ஓம் சக்தி ஸ்ரீவேம்படி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இருபத்தி இரண்டாம் ஆண்டு கொலு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடந்தன.
இந்த நிகழ்ச்சியில் நன்னிலத்தைச் சுற்றி உள்ள சிறுவர்கள், குழந்தைகள் இக்கோயிலில் வந்து பரதநாட்டியம் ஆடி, விழாவைச் சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைக் கண்டு களித்து நவராத்திரி விழாவைக் கொண்டாடினர்.
மேலும் அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்கள்: சொகுசு கார் விற்பனையில் மோசடி - ஒருவர் கைது