ETV Bharat / state

அம்மை நோய்க்கு தந்தை - மகன் உயிரிழப்பு: பேரனுக்கும் நோய் பாதிப்பு! - Two cases death of Chicken box in Tirupathi pondi

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அம்மை நோய்க்கு தந்தை - மகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து பேரனுக்கும் நோய் பரவியதால் சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் மருத்துவ முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

chicken box death in thiruvaarur
author img

By

Published : Nov 5, 2019, 4:50 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது கற்பகநாதர்குளம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தெற்கு பண்ணைசேத்தி பகுதியைச் சேர்ந்தவர் வாழமுத்து (85 ). இவருக்கு அன்பு ராஜன்(50) என்ற மகனும், பேரழகன் (20) என்ற பேரனும் உள்ளனர்.

கடந்த வாரம் வாழமுத்து அம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் அன்புராஜனுக்கும் அம்மைத் தொற்று நோய் பரவி அவதிப்பட்டு வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அம்மை நோய்க்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையையும், மகனையும் பறிகொடுத்த நிலையில், பேரன் பேரழகனுக்கும் அம்மை நோய் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனால் தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி மூன்றாம் ஆண்டு படித்து வரும் அவர் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாகி விட்டார். மேலும் இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் அம்மை நோய் தாக்கியது. இதனால் அவர்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இச்சம்பவங்களால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுகாதாரத்துறையினக்கு தகவல் தெரிவித்தனர்.

அம்மை நோய்க்கு தந்தை - மகன் உயிரிழப்பு

தகவல் அறிந்து அரசு மருத்துவர் திவ்யபாரதி, ஆனந்தன் தலைமையில் வந்த மருத்துவக்குழு அப்பகுதியில் மருத்துவ முகாமிட்டு அனைத்து வீடுகளுக்கும் சென்று நோய்ப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதையும் படிங்க: வெப்பநிலை வேறுபாடே பனிக்கு காரணம் -பாலச்சந்தர் தகவல்!

Intro:Body:திருத்துறைப்பூண்டி அருகே அம்மை நோய்க்கு தந்தை-மகன் பலியானதை தொடர்ந்து பேரனுக்கும் நோய் பரவியதால் சுகாதாரதுறையினர் அப்பகுதியில் மருத்துவ முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கற்பகநாதர்குளம் கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் தெற்கு பண்ணைசேத்தி பகுதியை சேர்ந்தவர் வாழமுத்து (85 )இவர் கடந்த வாரம் அம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் அன்புராஜன்( 50) அவருக்கும் அம்மைத் தொற்று நோய் பரவியது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார் .ஒரே குடும்பத்தில் தந்தையையும் மகனையும் பறிகொடுத்த நிலையில் அம்மை நோய் தொற்று அதே குடும்பத்தைச் சேர்ந்த வாழமுத்துவின் பேரன் பேரழகன் (20) இவர் தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அம்மை நோய் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாகி விட்டார். மேலும் இதேபோல்அப்பகுதியை சேர்ந்த மேலும் சிலருக்கும் அம்மை நோய் தாக்கியது இதனால் அவர்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இச்சம்பவங்களால் பீதியடைந்த அப்பகுதியினர் மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவித்த தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு அரசு மருத்துவர் திவ்யபாரதி ஆனந்தன் தலைமையில் அனைத்து வீடுகளுக்கும் சென்று நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.