ETV Bharat / state

'காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தலைவரை நியமிக்க வேண்டும்' - பி.ஆர். பாண்டியன் - பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர்: காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தலைவரை நியமிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

br-pandian
br-pandian
author img

By

Published : Feb 25, 2020, 11:33 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன், "தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு மன்னார்குடியில் மார்ச் 08, 09 தேதிகளில் நடைபெற உள்ளது. அதில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தலைவர் இல்லாமல், மத்திய நீர்வள ஆணைய செயலாளர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கர்நாடக அணைகளில் தண்ணீருள்ள நிலையில் மாதம்தோறும் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீீரை கர்நாடக அரசு வழங்காமலிருக்கும் நிலையில் பெயரளவில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்திருப்பது தமிழ்நாடு விவசாயிகளை ஏமாற்றும் செயலாகவுள்ளது. ஆகவே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பு

அதைத்தொடர்ந்து அவர், தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் காவிரி டெல்டா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்த அனுமதியில்லை என அரசாணை வெளியிட்டிருப்பதை வரவேற்பதாகவும், ஒஎன்ஜிசி நிறுவனம் பெற்ற பழைய அனுமதியை கொண்டு ஹைட்ரோகார்பன் எடுக்கவிருப்பதைத் தடுக்க ஆய்வுக்குழு அமைத்து அதனைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: 'ஒ.என்.ஜி.சி. கிணறுகள் அமைக்க அரசு இனி அனுமதியளிக்கக் கூடாது' - பி.ஆர். பாண்டியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.