கரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகளில் வழங்கும் இலவச அரிசியுடன் சேர்த்து அத்தியாவசியப் பொருள்களையும் கடந்த மூன்று மாத காலமாக வழங்கி வருகிறது.
இதனிடையே மத்திய அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் வரை நபர் ஒன்றுக்கு 5- கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்தார்.
அந்த இலவச அரிசியும் சேர்த்து தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசி, அத்தியாவசிய பொருள்கள் இன்று( ஜூலை 10) முதல் வழங்கப்படவுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 லட்சத்து 70 ஆயிரத்து 368 ரேஷன் கார்டுகளுக்கு 12 ஆயிரத்து 379 டன் அரிசி வழங்கப்பட உள்ளது. இந்த அத்தியாவசிய பொருள்கள் மாவட்டம் முழுவதும் உள்ள 721 ரேஷன் கடைகளிலும் லாரிகள் மூலம் கொண்டு சேர்க்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த அத்தியாவசிய பொருள்களை பெறுவதற்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரோந்து போலீஸை கண்டதால் திருடிய போனை கொடுத்துவிட்டு எஸ்கேப்பான திருடர்கள்!