திருவாரூரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு வழிகளில் வாக்குச் சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வெற்றியைக் கைப்பற்றினாலும், சில வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி அடைந்துவிடலாம் என நம்பியிருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மன்னார்குடியில் சில பதவிகள் ஏலம்விடப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன.
நாசா வெளியிட்ட ஒலியையே திருத்தி பதிவிட்ட ஆளுநர் கிரண் பேடி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
இச்சூழலில் மன்னார்குடி அருகே கீழபனையூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பரமேஸ்வரி என்பவர் போட்டியிட்டுள்ளார். இவரது கணவர் குணசேகரன் டாஸ்மாக்கில் பணிபுரிந்துவருகிறார்.
தனது மனைவியை வெற்றிபெற வைப்பதற்காக ஒரு வாக்கிற்கு ரூபாய் 250 வீதம் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 100 வாக்கு மட்டுமே வாங்கிய அவரது மனைவி தோல்வியடைந்துள்ளார்.
பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்காமல் அவரை ஏமாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளரின் கணவர், ‘பணம் வாங்குனியே... ஓட்டு போட்டியா’ என்னும் வாசகம் கொண்ட சுவரொட்டிகளை கிராமம் முழுவதும் ஒட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.