ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டம்: தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்! - CAA protest

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற கோரியும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

caa-then-tn-police-warning-against-protest

author img

By

Published : Feb 17, 2020, 3:53 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பூதமங்கலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும்,சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் பூதமங்கலம் கிளை தலைவர் சலாவுதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் அப்துல் ரகுமான் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ”மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்த கூடிய இச்சட்டம் மக்களை அவதிக்குள்ளாக்கும் சட்டமாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தேசம் முழுவதும் சமூக அக்கறை கொண்டவர்கள், எதிர்க்கட்சிகள் என்று, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்பாட்டம்

மேலும், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல் துறை அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தடியடி மூலம் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய அராஜக போக்ககில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு உடனடியாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்” என்றார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்து கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை' - மக்கள் நல்வாழ்வுத்துறை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.