திருவாரூரில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் கட்சி, கட்டடத் தொழிலாளர் சங்கத்தினர் பொதுக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், ' மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்திய மக்களை கூறு போடக்கூடிய ஒரு செயலாக உள்ளது. ஈழத் தமிழர்களை வஞ்சிக்கும் செயலாகவும், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. அதற்கு தமிழ்நாடு அரசும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் திமுக தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் விவசாயத் தொழிலாளர் கட்சி கலந்துகொள்ள உள்ளது.
தற்போது மணல் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. எம் - சாண்ட் உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே எம் - சாண்ட் தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது' என்றார்.
இதையும் படிங்க: