ETV Bharat / state

‘முதலமைச்சரைக் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் பேசும் ஸ்டாலின்’ - அமைச்சர் காட்டம் - Blame the Chief Minister

திருவாரூர்: முதலமைச்சரை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்
author img

By

Published : May 29, 2020, 4:01 PM IST

திருவாரூர் அருகே கூத்தங்குடி காட்டாறு பகுதியில் தூர்வாரும் பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தூர்வாரும் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் நிறைவு பெற்று அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்று சேர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்குள் தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும். திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 88 தூர்வாரும் பணிகள், 106 குடிமராமத்து பணிகள் ஆகியவை சுமார் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடத்தி முடிக்கப்பட உள்ளது.

மக்களின் உணவுத்தேவையைப் பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது முதல் மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து வருகின்றோம். ஒன்பது லட்சம் பேருக்கு அம்மா உணவகம், சமுதாய சமையலறை மூலமாக உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

அரசு வெளிப்படைத் தன்மையோடு மக்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சரை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார். இது முற்றிலும் அரசியல் நாடகத்தனமான செயல்" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுகவின் ஊழல்கள் பற்றி புகார் அளிப்பதால் கைது - ஆர்.எஸ். பாரதி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.