திருவாரூர் மாவட்டம், குடவாசல் அத்திக்கடை அருகே புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுபேர சாய்பாபா ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய யாகசாலை பூஜையானது ஆறு காலங்களாக நடைபெற்று இன்று, காலை மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
பின்னர் தீப ஆராதனை நடைபெற்றதைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க விமானம் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து புனரமைக்கப்பட்ட விநாயகர், ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலயத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில், மிஷன் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பொறுப்பாளர் சிவசங்கரன், மாநில பொறுப்பாளர்கள் ரவி, சாணக்கியா, எஸ்.வி பிள்ளை ஆகியோருடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்