கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட திருத்தம், ஜூன் 3 ஆம் தேதி கொண்டு வந்த மூன்று அவசர சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் சட்ட திருத்தம் 2020, வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக அவசர சட்டம் 2020, விலை உறுதி வேளாண் சேவைகள் அவசர சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
அப்போது மத்திய மாநில அரசுகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் வி.எம் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவைச் சேர்ந்த அசோகன், ராசு, இளங்கோ, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியினரும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியினர் மீது ஊராட்சி மன்றத் தலைவர்கள் புகார் மனு!