ETV Bharat / state

பதவியேற்பு விழாவில் அதிமுக, திமுக இடையே மோதல்!

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்கும் நிகழ்ச்சியின்போது, அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

AIADMK, DMK clash
AIADMK, DMK clash
author img

By

Published : Jan 6, 2020, 9:40 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் இளமதி என்பவரும், அதிமுக சார்பில் மாலதி என்பவரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது திமுக சார்பில் போட்டியிட்ட இளமதி அதிமுக வேட்பாளரை விட 23 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாகத் தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுகூட்டல் கோரி, அதிமுக மனு அளித்த நிலையில் இளமதி வெற்றி பெற்றதாக மீண்டும் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட திமுகவைச் சேர்ந்த இளமதி என்பவர் இன்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தனது ஆதரவாளருடன் வந்துள்ளார்.

அப்போது அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மாலதியின் ஆதரவாளர்கள், இளமதி பதவி ஏற்கக் கூடாது எனவும் உடனடியாக மீண்டும் அனைத்துத் தரப்பினர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதவியேற்பு விழாவில் அதிமுக, திமுக இடையே மோதல்

இதனால் திமுக தரப்பினக்கும் அதிமுக தரப்பினரக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். பிறகு திமுக சார்பில் வெற்றி பெற்ற இளமதி எழிலூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: சுயேச்சை வார்டு உறுப்பினரை கடத்த முயற்சி; கட்சியினரிடையே மோதல் - போலீஸ் தடியடியால் பதற்றம்

Intro:Body:திருத்துறைப்பூண்டி அருகே திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்கும் நிகழ்ச்சியின்போது அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் இளமதி என்பவரும், அதிமுக சார்பில் மாலதி என்பவரும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது
திமுக சார்பில் போட்டியிட்ட இளமதி அதிமுக வேட்பாளர் மாலதியை விட 23 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் தெய்வநாயகி அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுகூட்டல் கோரி அதிமுக மனு அளித்த நிலையில் இளமதி வெற்றி பெற்றதாக மீண்டும் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட திமுக-வை சேர்ந்த இளமதி என்பவர் இன்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தனது ஆதரவாளருடன் வந்துள்ளார். அப்போது அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மாலதியின் ஆதரவாளர்கள் இளமதி பதவி ஏற்க கூடாது எனவுன் உடனடியாக மீண்டும் அனைத்து தரப்பினர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக தரப்பினக்கும் அதிமுக தரப்பினரக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதனை தொடர்ந்து பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பேட்டி: சாமிநாதன் ADMK,Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.