திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்து மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ராமன். இவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் பரமசிவம் அடியாட்களுடன், கோபால் ராமன் சாகுபடி செய்துள்ள பயிர்களை டிராக்டர் கொண்டு ஏற்றி நாசப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, கோபால் ராமன், திருவாரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிசாமியை சந்தித்துப் புகார் அளித்தனர்.
இப்புகார் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அமமுகவில் மாற்று கட்சியினர் இணையும் விழா!