திருவாரூர்: நன்னிலம் அருகே மான்கண்டமூளை கீழத் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகனும், அதே தெருவைச் சேர்ந்த தேசிங்கு என்பவருடைய மகனும் வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறுவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கச் சென்ற சிறுவர்களுடைய பெற்றோர் இருவரும் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது தேசிங்கு என்பவர் சிறுவனின் தாயாரின் ஆடையை பிடித்து கிழித்துள்ளார். இதனால், அப்பெண் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிங்கை கைது செய்தனர்.
இதையும் படிங்க: வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ற மூவர் கைது!