கரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல்வேறு அவசரக் கால நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகின்றன. அதன்படி இந்தியா முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை கூறுகையில், “மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 328 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளன. மேலும் வெளியில் சுற்றுபவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் இந்த ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி சுய தனிமைப்படுத்தலை பின்பற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: உணவு கேட்டு கூடிய தொழிலாளர்கள் மீது தடியடி!