ETV Bharat / state

ஒருதலைக் காதல்: 17 வயது சிறுமியை குத்திவிட்டு இளைஞர் தற்கொலை - Nammiyandal news

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ. நம்மியந்தல் கிராமத்தில், காதலை ஏற்காததால் 17 வயது சிறுமியை கத்தியால் குத்திய இளைஞர், மின்கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

oneside lover stabbed girl suicide tiruvannamalai  Kil Pennathur  திருவண்ணாமலை செய்திகள்  ஒரு தலைக் காதல்  Nammiyandal suicide  Nammiyandal murder attempt  Nammiyandal news
17 வயது சிறுமியைக் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
author img

By

Published : Jul 20, 2020, 10:13 AM IST

Updated : Sep 8, 2020, 10:38 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ.நம்மியந்தல் கிராமத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த பிரசாந்த் (19), அதே பகுதியைச் சேர்ந்த அனிதா (17) என்ற சிறுமியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். நேற்று (ஜூலை 19) தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் பிரசாந்த் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அனிதா மறுப்பு தெரிவிக்க, ஆத்திரத்தில் சிறுமியை இரும்புக் கம்பியால் கை, தலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய அவர், மின்கம்பத்தின் மீது ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த காவல் துறையினர், பிரசாந்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே, இளைஞரால் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை, அவரது உறவினர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் நள்ளிரவில் தொடரும் பைக் ரேஸ் - 6 இளைஞர்கள் கைது

Last Updated : Sep 8, 2020, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.