திருவண்ணாமலை மாவட்டம், நகரம் 6வது வார்டில் வசிக்கும் முருகன் என்பவருக்குச் சொந்தமான வீட்டுமனை, வேறு ஒருவர் பெயருக்கு தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை சரிசெய்து தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துதர வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் முதல், சர்வேயர் வரை பல அலுவலர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று முருகன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பெயர் மாற்றத்திற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், வீட்டுக்கு அலைந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த முருகன் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று தனி நபராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தனிநபராக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க: Collector's human act saves boy life: இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்!