ETV Bharat / state

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - வரதர்சணை கொடுமை விவகாரம்

செங்கம் அருகே வரதட்சணை கொடுமையால் பட்டதாரி இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
Etv Bharat இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
author img

By

Published : Aug 22, 2022, 10:51 AM IST

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியைச் சேர்ந்த அமாவாசை மகள் தீபா. பெங்களூரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மதனை காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் கொண்டார். அதன் பின்னர் மதனுடன் பெங்களூரில் வசித்து வந்த தீபாவை அவரது கணவரின் தாயார் அஞ்சலை மற்றும் கணவரின் அக்கா ரேகா தந்தை மாரிமுத்து ஆகியோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும்படி துன்புறியத்தாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தீபா தனது தாய் தந்தையை காண திடீரென தோக்கவாடியில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இரண்டு தினங்களாக தனிமையிலே இருந்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த தீபா கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டின் பின்புறம் உள்ள கொய்யா மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் காலையில் தனது மகளை காணவில்லை என தீபாவின் தாயார் வீட்டில் தேடி பார்த்துவிட்டு பின்னர் வீட்டின் பின்புறம் சென்று பார்க்கும் போது தீபா தற்கொலை செய்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கணவரின் வீட்டில் நடக்கும் கொடுமையை சகித்துக் கொண்டு இனியும் வாழ முடியாது என்று கடிதம் எழுதி வைத்திருப்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீபாவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை... பதறவைக்கும் வீடியோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.