ETV Bharat / state

சென்னையிலிருந்து மறைமுகமாக குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளிகள்! - திருவண்ணாமலையில் சென்னையிலிருந்து மறைமுகமாக குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளிகள்

திருவண்ணாமலை: சென்னையிலிருந்து மறைமுகமாக குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பிய 147 பேர் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்து, கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளிகள்

author img

By

Published : May 3, 2020, 9:37 AM IST

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவிவருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னைக்குப் பிழைப்புத் தேடிச்சென்ற திருவண்ணாமலை மாவட்ட கூலித் தொழிலாளிகள் சென்னையிலேயே முடங்கிக் கிடந்தனர்.

தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருவதால் சொந்த ஊருக்குச் செல்ல தீர்மானித்த கூலித் தொழிலாளிகள், யாரிடமும் அனுமதி பெறாமல் முன்னறிவிப்பின்றி மறைமுகமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த ஊருக்கு மனைவி, குழந்தைகளுடன் குடும்பமாக வந்து சேர்ந்தனர்.

இவர்கள் பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின்பேரில் திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மாவட்ட எல்லையில் காவல் துறையினர் தடுப்பு அமைத்து கண்காணித்துவரும் நிலையில் சென்னையிலிருந்து நேற்றிரவு வந்த 147 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறையின் மூலம் அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளிகள்
மேலும் தொடர்ந்து புதிதாக வந்த தொழிலாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கூலித் தொழிலாளிகள் தங்கியிருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, குளோரின் பவுடர்கள் தூவப்பட்டன. கல்லூரி வளாகம் முழுவதும் தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்துவருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.