உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து அண்ணா நுழைவுவாயிலில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம் வரை பெருமித நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நடைபெற்ற பெண்களின் பெருமித நடை பயணத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியின் சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா கலந்துகொண்டார்.
நடைப்பயணத்தில் கலந்துகொண்ட பெண்கள், இருப்பாய் பெண்ணே நெருப்பாய், பெண்கள் இல்லா வீடு செல்வமற்ற வீடு, நடப்பாய் பெண்ணே சுதந்திரமாய், நடப்போம் நடப்போம் தைரியமாய் நடப்போம் என்று முழக்கமிட்டவாறு சென்றனர்.
பெண்களின் சாதனைகள் எடுத்துக் கூறும் வகையிலும், பெண்களுக்கு இரவிலும் சுதந்திரமாக நடமாடும் பாதுகாப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையிலும் இந்த பேரணி அமைந்திருந்தது.
இந்த நடைப்பயணத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பெருமித நடை போட்டனர்.
இதையும் படிங்க: பெண்கள் மட்டும் பணியாற்றும் நடமாடும் டீக்கடையை திறந்து வைத்த நாசர்!