திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை அடுத்த மேல் பள்ளிப்பட்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள் நாராயணதாஸ் செயல்விளக்கம், துண்டறிக்கை கொடுத்து கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது அரசு வழங்கும் அறிவுரைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும், தங்களைத் தாங்களே சிறந்த முறையில் பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் கொடுத்தார்.
சாதாரண வைரஸ் காய்ச்சல், இருமல், தும்மல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைசெய்து கொள்ள வேண்டும் என்றும் யாரும் தேவையில்லாமல் பொது இடத்திற்குச் செல்லக் கூடாது என்றும் தெரிவித்தார். பின்பு ஒவ்வொருவராக அழைத்து கை கழுவும் முறை குறித்து கற்றுக் கொடுத்தார்.
இந்த விழிப்புணர்வு முகாமில் ஒன்றியக்குழுத் தலைவர் விஜயராணி குமார், தேமுதிக ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி சங்கர் - மேல்செங்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சத்யா, கலைச்செல்வி, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமின் முடிவில் அனைவரும் ஒன்றுசேர்ந்து கரோனா வைரஸ் தடுப்புமுறை குறித்த அரசின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
இதையும் படிங்க... சென்னை அருகே இரண்டு பெண்களுக்கு கரோனா பாதிப்பு