திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு ஆட்சி செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, " வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி மற்றும் பேரூராட்சி வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஊராட்சி வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டும் பயன்படுத்தப்படவிருக்கிறது.
ஆகையால், பயன்படுத்தப்படவிருக்கிற வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மாதிரி வாக்குப்பதிவின் மூலமும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வருகிற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக உள்ளது "என்றார்.
இதையும் படிங்க: ஏடிஎம் சிசிடிவி கேமரா மீது திரவத்தை தெளித்து கொள்ளை முயற்சி