ETV Bharat / state

மின்னணு வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பு அறைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியர்! - சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி

author img

By

Published : Apr 7, 2021, 10:41 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று (ஏப்.06) மாவட்டம் முழுவதிலும் 2 ஆயிரத்து 885 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பாதுகாப்பு அறையில் வைத்து அறைக்கு சீல் வைக்கும் பணிகளில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முண்ணிலையில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வாக்கு எண்ணும் மையத்திற்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி

துணை ராணுவம், வெளிமாநில காவல் துறையினர், உள்ளுர் காவல் துறையினர் ஆகியோர்களின் தீவிர கண்காணிப்பில் இந்த வாக்கு எண்ணும் மையம் உள்ளது. இவையனைத்தும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் 24 மணி நேரம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கேமரா பதிவுகளை வேட்பாளர்களின் முகவர்கள் கூட டிவியின் திறையின் மூலம் காணலாம், வெளியாள்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.