ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை ஆணையம் நவம்பர் 25 ஆம் தேதியை பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளது. இதனை உலக அளவிலான பெண்கள் அமைப்புகள், பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினமாக நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை அகில உலக மனித உரிமை நாள் என 16 நாட்களை வன்முறையில்லா ஒளிமயமான எதிர்காலம் என்ற கோஷத்தோடு உலக அளவில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை அண்ணாசிலை முன்பு நடைபெற்ற மவுனப் போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள், வன்முறை எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினர். பின்னர் பெண் உரிமையும் மனித உரிமையும் மதிக்கப்பட வேண்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் கொலைகள் நடப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கஞ்சா, குட்கா ,பான் மசாலா மற்றும் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும், மத்திய, மாநில அரசுகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகளில் குடி மற்றும் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டும், மத்திய மாநில பெண்கள் ஆணையத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
இதையும் படிங்கபெண்கள் மீதான வன்முறையை தடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் நடைபயணம்!: