ETV Bharat / state

மணல் கொள்ளையை தடுக்க கிராம மக்கள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்! - மணல் கொள்ளையை தடுக்க கிராம மக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம்

திருவண்ணாமலை: ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தி நாகநதி ஆற்றங்கரையில் கிராம மக்கள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Villagers
Villagers
author img

By

Published : Jun 16, 2021, 5:09 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்கா நல்லூர் கிராமப்பகுதியில் நாகநதி ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு குடிநீருக்கும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் ஆற்றை தூர்வாரும் விதமாக நாகநதி ஆற்றில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றிலிருந்து மணல் எடுத்து கரையில் குவித்து வருகின்றனர். இந்த மணல் ஈரம் காய்ந்தவுடன் சமூக விரோதிகள் சிலர் அதனைக் கடத்தி விற்றுவருகின்றனர்.

இது குறித்து, கிராமத்தினர் பல முறை ஆரணி வருவாய்துறை அலுவலர்களிடமும் காவல்துறையினரிடமும் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து காட்டுக்கா நல்லூர் கிராமத்தினர் மணல் கொள்ளையை தடுக்கும் விதமாக நாகநதி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Villagers
நாகநதி ஆற்றங்கரை மணல்

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், " விவசாயத்தை நம்பிதான் எங்கள் வாழ்வாதரம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி சுமார் 2ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாயத்திற்கு வாழ்வாதரமாக நாகநிதி ஆறு உள்ளது. தற்போது நாகநிதியில் நீரோட்டம் இருப்பதால் இதனை சுற்றியுள்ள நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

தற்போது இரவு பகல் பாரமால் சிலர் நாகநிதியின் மணலை அள்ளிவருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தால், தண்ணீர் பஞ்சம், விவாசயம் செய்யமுடியாமல் போகும் நிலை உருவாகவாய்ப்பு உள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வருவாய்த்துறை, காவல்துறையினரிடம் பல முறை புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை.

ஜூன் மாதம் 14ஆம் தேதி நாகநதியில் மணல் கடத்தியவர்கள் காட்டுக்கா நல்லூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த மணல் கொள்ளை குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அளிக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.