ETV Bharat / state

வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திவந்த வாகனம் பறிமுதல்: தி.மலையில் மூவர் கைது - Corona

திருவண்ணாமலை: காய்கறி, பழ வாகனங்களின் வெளிமாநில மதுபாட்டில்களைக் கடத்திவந்த மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திவந்த வாகனம் பறிமுதல்

author img

By

Published : Jun 5, 2021, 12:09 PM IST

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் முழு ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்குச் சென்று மது பாட்டில்களைத் திருட்டுத்தனமாக வாங்கிவந்து சிலர் விற்பனை செய்துவருகின்றனர்.

இதனைத் தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் ஆய்வாளர் தனலட்சுமி, உதவி ஆய்வாளர் முத்துக்குமாரசாமி, காவலர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 3) இரவு மலமஞ்சனூர் காளியம்மன் கோயில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது திருவண்ணாமலையிலிருந்து மினி வேன் ஒன்று வந்தது, வாகனத்தில் அன்னாச்சிப் பழம் இருந்ததைப் பார்த்த காவலர்கள் ஓட்டுநர் ஆனந்திடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின்னாகப் பதிலளித்தார்.

சந்தேகமடைந்த காவலர்கள் வாகனத்தைச் சோதனை செய்தபோது 59 பெட்டிகளில் 2,832 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தனிடம் விசாரிக்கையில், அவர் தானிப்பாடி அருகே உள்ள டி. வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் எனத் தெரியவந்தது.

கரோனா காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டுள்ளதால் இந்த நேரத்தில் பெங்களூருவிலிருந்து தனக்குச் சொந்தமான மினிவேனில் குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கிவந்து தமிழ்நாட்டில் அதிக விலைக்கு விற்கலாம் என்று ஏற்றிவந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரை வாகனத்தைப் பறிமுதல்செய்து தானிப்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டுசெல்லும்படி உத்தரவிட்டார்.

இது குறித்து தானிப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் ஆனந்தனை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திவந்த வாகனம் பறிமுதல்
வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திவந்த வாகனம் பறிமுதல்

சம்பவம் 2

இதேபோல் ஆரணி அருகே இரும்பேடு கூட்ரோட்டில் தற்போது தற்காலிக காய்கறிச் சந்தை இயங்கிவருகின்றது. இங்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து ஆரணி காய்கறிச் சந்தைக்கு காய்கறிகள் கனரக வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்திலிருந்து ஆரணி பகுதிக்கு மதுபாட்டில் கடத்திவரப்படுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதயடுத்து காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியிலிருந்து காய்கறி ஏற்றிவந்த லாரியை சோதனை செய்தனர்.

இதில் ரூ.30,000 மதிப்பிலான 219 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து மதுபாட்டில்களைப் பறிமுதல்செய்து கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த மாதப்பன், சூளகிரி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி ஆகிய இரண்டு பேரை ஆரணி தாலுகா காவல் துறையினர் கைதுசெய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய கனரக லாரியைப் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.