பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், உத்தராயன புண்ணிய கால உற்சவம் கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 10 நாள்களாக காலையும், மாலையும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், உத்தராயன புண்ணிய கால உற்சவத்தின் பத்தாவது நாள் இன்றுடன் நிறைவடைந்தது. உற்சவம் நிறைவடைந்ததை ஒட்டி தாமரை குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.