திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அருகே உள்ள கஸ்தம்பாடி கல்குவாரி குட்டையில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று (செப் 4) குளிக்க சென்றுள்ளனர். அப்போது வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த +2 படிக்கும் மாணவன் சக்திவேல், கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் லோமிநாதன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் களம்பூர் போலீசார் தீயணைப்புத்துறை அலுவலர்களுடன் விரைந்து இருவரது உடல்களையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:சென்னை துறைமுகத்தில் 9 டன் ஃபார்மா கெமிக்கல் மாயம்