திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2018ஆம் கணவர் விபத்தில் உயிரிழந்த பிறகு தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஒரு வருடமாக பெண் வசிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பருடன் பெண் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வருவதாக தெரிகிறது.
இதனிடையே, இரண்டு மாணவிகளும் தாயிடம் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் எடுத்துத் தரவேண்டும் என கோரியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சுபாஷ் தகாத வார்த்தைகளால் பேசியதால் மனமுடைந்த இரண்டு மாணவிகளும் இன்று (நவ.10) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உடல் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
உடனடியாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றிப் பின்னர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தீபாவளிக்கு தாயிடம் புத்தாடை கேட்ட பள்ளி மாணவிகள் இருவரை, அவரது தாயாருடன் முறையற்ற உறவில் இருந்தவர் திட்டியதால் மனமுடைந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "வேங்கைவயல், நாங்குநேரி விவகாரத்தை திசை திருப்பவே திமுக 'நீட்' குறித்து பேசுகிறது" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை குற்றச்சாட்டு