ETV Bharat / state

அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் கடத்திச் சென்றவர்கள் கைது - two men arrested for illegal trafficking of detonator and jelatin

திருவண்ணாமலை: வந்தவாசியை அடுத்த வயலாமூர் கிராமத்தில் அனுமதியின்றி கொண்டுச் செல்லப்பட்ட 1000 ஜெலட்டின் குச்சிகளையும், 950 டெட்டனேட்டர்களையும் கடத்திய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

two men arrested for illegal trafficking of detonator and jelatin

author img

By

Published : Apr 25, 2020, 9:35 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வயலாமூர் கிராமத்தில் தெள்ளார் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அல்லிராணி தலைமையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மடக்கி சோதனை செய்ததில் அனுமதியின்றி 1000 ஜெலட்டின் குச்சிகளையும், 950 டெட்டனேட்டர்களையும் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மேலும் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசி அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரையும், செங்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனும் பொன்னூர் கிராமத்தில் தனியார் குடோனில் இருந்து அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகளையும், டெட்டனேட்டர்களையும் கடத்திக்கொண்டு விழுப்புரம் நாட்டார்மங்கலம் பகுதிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.

ஜெலட்டின் குச்சிகள், டிடோனேட்டர்கள் கடத்திச் சென்ற நபர்கள் கைது

அதன் பின்னர் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், இரண்டு இருச்சக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து சின்னதுரை, வெங்கடேசன் இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க...ஊரடங்கில் உடும்பு வேட்டை... சாப்பிடுவதை டிக்டாக்கில் பதிவிட்ட 6 இளைஞர்கள் கைது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.