ETV Bharat / state

செங்கத்தில் லாரி ஓட்டுநர் கழுத்தை அறுத்து கொலை

author img

By

Published : Jun 18, 2021, 9:43 AM IST

செங்கத்தில் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

கொலை
கொலை

திருவண்ணாமலை: செங்கம் குப்பநத்தம் சாலை தளவாநாயக்கன்பேட்டை பகுதியில் லாரி ஓட்டுநர் ராஜா (45) என்பவர் வசித்துவந்தார். இவர் திருமணமாகி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது தனது தாய், அண்ணன் செல்வம், அண்ணன் மனைவி பராசக்தி (52) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 17) இரவு ராஜா மது அருந்திவிட்டு உறங்கி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அதிகாலையில் உறவினர்கள் எழுந்து பார்த்தபோது, ராஜா கழுத்தறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவலர்கள், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை நடந்த வீட்டின் குளியல் அறையில் இருந்த துணியில் ரத்தக் கறைகள் இருந்துள்ளன. இறுதியில் கைப்பற்றப்பட்ட துணி உடன் வசித்து வந்த பராசக்தியினுடையது எனத் தெரியவந்தது.

இதன் காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் பராசக்தி, அவரது தாயார் வனரோஜா (65), சகோதரி சரிதா (40) ஆகிய மூவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : மது போதையால் வந்த வினை - மாணவன் கொலை வழக்கில் ஐவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.