ETV Bharat / state

இடம் ஆக்கிரமிப்பு: பழங்குடியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் - etv bharat tamilnadu

திருவண்ணாமலையில் பழங்குடி மக்களின் இடத்தை ஆக்கிரமிக்க சிலர் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றனர். இந்நிலையில் பழங்குடி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று (அக். 1) வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழங்குடி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

author img

By

Published : Oct 1, 2021, 3:24 PM IST

திருவண்ணாமலை: வந்தவாசி வட்டம் பெரணமல்லூர் பகுதியில் வீடற்ற நிலையில் நீண்ட காலமாக இருளர் இனப் பழங்குடி மக்கள் அவதிப்பட்டுவந்தனர். மார்க்சிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர் முன்னெடுப்பால் ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் பழங்குடி மக்கள் வசிக்க வருவாய்த் துறை இடத்தை ஒதுக்கியது.

அந்த இடத்தில் குடிசை கட்டி பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்தனர். இந்த இடத்தை ஆக்கிரமிக்க சிலர் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றனர்.

பழங்குடி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

இந்நிலையில் அங்கு வசிக்கும் ஒருவரது குடிசையைக் கடந்த வாரம் அராஜகமாகச் சிலர் பிரித்து எறிந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதன் காரணமாக பழங்குடி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்று (அக். 1) வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: விட்டாச்சு லீவு - நனைந்து கொண்டே வீட்டுக்கு சென்ற மாணவர்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.