திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஜன. 09) ஆயுதப்படை காவல் துறையினருக்கு, கலவரத்தைக் கட்டுப்படுத்தும் (மாஃப் ஆபரேஷன்) குறித்த பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. ஈசான்ய மைதானத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) கிரன்சுருதி தலைமையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
அதில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலவரம் நடந்தால் அதனைத் தடுக்கும்விதம் குறித்து, ஆயுதப்படை காவல் துறையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் கலவரங்கள் நடத்துபவர்களை எச்சரித்தல், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைந்துபோகச் செய்தல், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலவரத்தைக் கட்டுப்படுத்தல், கண்ணீர்ப் புகைக்குண்டு வீசுதல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இவற்றை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வேண்டும் - ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் மனு!