திருவண்ணாமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து அறிவொளி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களையும், ஈழத் தமிழர்களையும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை கழகப் பேச்சாளர் அச்சரப்பாக்கம் ஷாஜகான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மனிதநேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் எம்.இ. சாகுல் ஹமீது நன்றி கூறினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: சிறுமிகள் விற்கப்படுவதாகப் புகார் - தனியார் நூற்பாலையில் போலீசார் அதிரடி சோதனை!