திருவண்ணாமலை: ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கருணாகரன் நூதனமான முறையில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார்.
அப்போது, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கருணாகரன் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ’கை, கால் உடைந்தால் கூட ஒட்ட வைத்துக் கொள்ளலாம் ஆனால் மண்டை உடைந்தால் மரணம் நிச்சயம்’ என்றும், ’உயிர் என்பது விலை உயர்ந்தது என்றும் ஆகவே உயிரைக் காப்பாற்ற ஹெல்மெட் அணியுங்கள்’ என்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
மேலும், ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தால் அபராதம் ஆயிரம் ரூபாய் என்றும், ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டுவதை விட 500 ரூபாய் கொடுத்து ஹெல்மெட் வாங்கி தலையில் அணியுங்கள் என்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் நட்பு ரீதியாக வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரம் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: செம்மரக் கடத்தல் ஏஜென்ட் அடித்துக் கொலை - போலீஸ் விசாரணை