ETV Bharat / state

100% வாக்குப்பதிவுக்கு 150 கடுகுகளில் விழிப்புணர்வு - அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்!

author img

By

Published : Jan 25, 2023, 8:58 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடவரம் அரசு பள்ளி மாணவிகள், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி 150 கடுகுகள் மற்றும் வண்ண காகிதங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

100 சதவீத வாக்குப்பதிவுக்கு 150 கடுகுகளில் விழிப்புணர்வு - அசத்திய மாணவிகள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடவரம் அரசு பள்ளி மாணவிகள், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி 150 கடுகுகள் மற்றும் வண்ண காகிதங்கள் மூலம் விழிப்புணர்வு

திருவண்ணாமலை: வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல நமது உரிமையும் கூட. நமது நாடு தனது அங்கீகாரத்தைப் பெற்று செழுமை மிக்க பயணத்தை தொடங்கி பல ஆண்டுகள் கடந்தபோதிலும், அதன் நிறைவான பாதையில் பயணிப்பதற்கு தனது வாக்கு சதவீதத்தை இன்னும் 100 சதவீதமாக முழுமையாக்கவில்லை.

எனவே 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக, வித்தியாசமான விழிப்புணர்வு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை அடுத்த லாடவரம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், காகித மடிப்பு கலை மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஓவியத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் வரைந்தனர்.

குறிப்பாக 10,184 பல்வேறு வண்ணங்களைக் கொண்ட காகித மடிப்புகள் மூலம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக காகித கோலங்களை வரைந்தனர். மேலும் 150 குண்டூசிகளில் கடுகை வைத்து, அதன் மேல் தேசியக் கொடியினை வரைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சேலை அணிந்து செங்குத்து மலையை ஏறி சாதனைப் படைத்த 8 வயது சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.