ETV Bharat / state

எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் படுகாயம்! - Tiruvannamalai gas lorry accident

திருவண்ணாமலை: சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி, செங்கம் பகுதி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை செய்திகள்  திருவண்ணாமலை கேஸ் லாரி விபத்து  Tiruvannamalai gas lorry accident  Tiruvannamalai gas cylinder lorry accident
எரிவாயு சிலிண்டர் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் படுகாயம்
author img

By

Published : May 21, 2020, 7:54 PM IST

வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை ஏற்றிவந்த லாரி, செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிலிண்டர்கள் அனைத்தும் குடியிருப்பு பகுதியில் சரிந்ததால், அப்பகுதி மக்கள் சிலிண்டர் வெடித்துவிடும் என்கிற அச்சத்தில் விபத்தில் சிக்கிய ஓட்டுநரை மீட்க தயக்கம் காட்டினர்.

பின்னர் செங்கம் காவல் துறையினருக்கு விபத்து குறித்து தகவலளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கிய ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை செய்திகள்  திருவண்ணாமலை கேஸ் லாரி விபத்து  Tiruvannamalai gas lorry accident  Tiruvannamalai gas cylinder lorry accident
விபத்துக்குள்ளான லாரி

அதன் பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், எடியூரிலிருந்து களம்பூருக்கு லாரி சென்றதாகவும், அதிகாலை ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தினால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

லாரி கவிழ்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டிருந்தால் சிலிண்டர்கள் வெடித்து அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் எனவும், நல்வாய்ப்பாக அப்படி ஒரு விபத்து ஏற்படவில்லையென்றும் அப்பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.

இதையும் படிங்க: 'எம்ஜிஆர் என் கடவுள்' - எம்ஜிஆர் சிலையை நாள்தோறும் வணங்கும் ரசிகர் நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.