ETV Bharat / state

திருவண்ணாமலை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...! - செய்யாறு

பவுர்ணமி கிரிவலப்பாதை, இங்குள்ள ஆசிரமங்கள் காரணமாக அதிகமான மக்கள் வந்து செல்லும் மாவட்டமாக உள்ளது திருவண்ணாமலை. இங்கிருக்கும் மலையும், மலைவளமும் வணக்கத்திற்குரியவையாகப் பார்க்கப்படுகின்றன. கோயில் கட்டடக்கலைக்கும், பெருவிழாவுக்கும் புகழ்பெற்றது அண்ணாமலையார் கோயில். பஞ்சபூத சிவதலங்களில் அக்கினி தலமாகவும் பார்க்கப்படுகிறது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இம்மாவட்டம், அரிசி உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது. படவேடு பகுதியில் வாழையும் பயிரிடப்படுகின்றன. கருப்பு, வண்ணக்கற்கள், மென்கற்கள் அதிகளவில் கிடைப்பதால் கிரானைட் இம்மாவட்டத்தில் உண்டு. தொழிலும் நடைபெறுகிறது. அன்றைய வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே வேலூர், கிழக்கே காஞ்சிபுரம், தெற்கே விழுப்புரம், மேற்கே கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.

tiruvannamalai district watch
திருவண்ணாமலை தொகுதிகள் வலம்
author img

By

Published : Mar 23, 2021, 8:36 AM IST

Updated : Mar 23, 2021, 11:23 AM IST

வாசல்:

ஆன்மீகச் சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தில், இரண்டு மக்களவைத் தொகுதிகளும், செங்கம், வந்தவாசி ஆகிய தனித்தொகுதிகள் உட்பட திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி என, எட்டு சட்டப்பேரவவைத் தொகுதிகள் உள்ளன.

தொகுதிகள் உலா:

செங்கம்: மாவட்டத்தின் பழமைக்கும், தொன்மைக்கும் சான்று பகரும் வராற்று ஆதாரங்கள் பலவற்றைக் கொண்ட தொகுதி செங்கம். காமராஜர் காலத்தில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் சாத்தனூர் பகுதியில் அணை ஒன்று கட்டப்பட்டடது.

இந்த அணையினைத் தூர்வார வேண்டும், குப்பனத்தம் பகுதியினை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும். செங்கம் பகுதியில் முடங்கிக் கிடக்கும் மத்திய, மாநில அரசுகளின் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள். பல ஆண்டுகளாக தனித் தொகுதியாக இருந்து வரும் செங்கம் தொகுதியை பொதுத் தொகுதியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கின்றனர் மக்கள்.

திருவண்ணாமலை: புகழ்பெற்ற அண்ணாமலையார் ஆன்மீக தலத்தையும், ஆஸ்ரமங்கள் அதிகம் கொண்ட தொகுதி. கிரிவலத்திற்காகப் பவுர்ணமி தோறும் இங்கு அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். திருவண்ணாமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்த வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

இங்கு நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணி இரண்டு ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ளது. புறவழிச்சாலை பணிகளும், 8 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகளாகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. மருத்துவக்கல்லூரி தரம் உயர்த்தப்பட வேண்டும், திருவண்ணாமலை - சென்னை இடையே ரயில் போக்குவரத்து சேவை வேண்டும் என்ற இம்மக்களின் கோரிக்கை இன்னும் கேட்கப்படவே இல்லை.

கீழ்பென்னாத்தூர்: தொகுதிகள் மறுசீரமைப்பிற்குப் பின்னர், கடந்த 2011 தேர்தலின் போது உதயமான தொகுதி. விவசாயிகள் நிறைந்த தொகுதி. நெல், கரும்பு, பூக்கள், தோட்டப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. திருவண்ணாமலை - திண்டிவனம் இடையே ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

திருவண்ணாமலை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்

மூன்று மாவட்ட விசவாயிகளுக்குப் பயன்படும் வகையிலுள்ள நந்தன் கால்வாய் பணியை முழுமையாக முடிக்க வேண்டும். ஆவூர் பகுதியில் நடைபெற்று வரும் கோரைப்பாய் தொழில் நலிவடைந்து வருகிறது. அதனை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தல்லாகுளம் பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்குத் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

பின்தங்கியத் தொகுதியாகவுள்ள இங்கு, சிறு குறு தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். கலைக்கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பன தொகுதிவாசிகளின் கோரிக்கைகளாக உள்ளன.

கலசபாக்கம்: கிழக்குத் தொடர்ச்சி மலையின் பர்வத மலை, ஜவ்வாது மலை இந்த தொகுதியின் அடையாளங்களுள் சில. விவசாயத்தை மட்டுமே முக்கியமாகக் கொண்டது இந்தத் தொகுதி. இந்தத் தொகுதியில் பூக்கள் உற்பத்தி அதிகம் நடைபெறுவதால், நறுமண பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இங்குள்ள மிருகண்ட அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஜவ்வாதுமலையில் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொழில் வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் இளைஞர்கள், அண்டை மாநிலங்களுக்கு கூலி வேலைக்கும், செம்மரம் வெட்டவும் சென்று கைதாகும் நிலை இருக்கிறது. இதனால், சிறு தொழிற்சாலைகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது இங்குள்ள மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

போளூர்: தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே உள்ளது. அடுத்தபடியாக நெசவு நடைபெறுகிறது. இந்தக் தொகுதியில் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல, இந்தப் பகுதிகளில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இங்கு செயல்பட்டு வந்த இரண்டு தனியார் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும்; விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும். முடையூர் கிராமத்தில் சிற்பக் கலைத் தொழில் நடந்து வருகிறது. இங்குள்ளவர்கள் வாழ்வாதாரம் மேம்பட அரசு கவனம் செலுத்த வேண்டும்.

ஆரணி: சோழர்களின் காலத்திலிருந்து பெயர் பெற்று விளங்கிவருகிறது ஆரணி. காஞ்சிபுரத்திற்கு அடுத்தபடியாக பட்டு உற்பத்திக்கும், தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக பொன்னி அரிசி உற்பத்திக்கும் ஆரணி பெயர் பெற்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு பூவிசார் குறியீடும், தேசிய விருதும் பெற்றது.

ஆரணியில் பட்டுப்பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. விவசாயிகளைப் போல மரபுசார் தொழில் செய்துவரும் தங்களுக்கும் விவசாயிகளுக்கு வழங்குவது போல கடனுதவி வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தனி அலுவலகம் அமைக்க வேண்டும், நியாயவிலைக் கடைகளுக்காக அரிசி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொகுதியில் இருந்து வருகிறது.

செய்யாறு: திருவண்ணாமலை ஒருங்கிணைந்த ஆற்காடு மாவட்டமாக இருந்த காலத்தில் இருந்து செய்யாறு தொகுதி இருக்கிறது. இங்குள்ள சிறப்பு மிக்க வேதபுரீஸ்வரர் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அதனை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும். ஜடேரி கிராமத்தில் நடைபெற்று வரும் நாமக்கட்டி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி அந்த தொழிலை மேம்படுத்த வேண்டும்.

இத்தொகுதியில் உள்ள மாணவர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் கோரிக்கையாகவுள்ளது. இங்குள்ள சிப்காட் பகுதியில் பணிபுரிபவர்களில் பெரும்பாலனவர்கள் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் ஊர்களுக்குச் செல்லும் வகையில், செய்யாறு பகுதியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

வந்தவாசி: மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித் தொகுதியில் ஒன்று. கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் விவசாயமும் கோரைப்பாய் உற்பத்தியும் நடைபெறுகிறது. தொகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் வேலை வாய்புகளுக்கு வழியில்லை. தொகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

வந்தவாசியை நினைவுபடுத்தும் கோரைப்பாய் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், நெசவாளர் பூங்கா அமைக்கப்பட வேண்டும். திண்டிவனம் - நகரி இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனை விரைந்து முடிக்கவேண்டும் போன்றவை தொகுதியின் முக்கியக் கோரிக்கைகளாகும்.

களநிலவரம்:

மாவட்டத்தில் 8 வழிச்சாலை, விளைநிலங்களில் அமைக்கப்படும் உயர்மின்கோபுரங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நாளுக்கு நாள் மக்கள் வரத்து அதிகரித்து வரும் திருவண்ணாமலையில் வாகன நிறுத்த வசதிகள் செய்து தரப்படவில்லை. பெரிய தொழில்வாய்ப்புகள் ஏதும் இல்லை என, மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் சில பல உண்டு.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில், கடந்த முறை 5 தொகுதிகளில் திமுகவும், 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளன. திருவண்ணாமலை திமுக கோட்டையா இருந்து வருகிறது. அதிமுக, இதுவரை இங்கு வெற்றி பெற்றதில்லை. விவசாயிகளிடம் உள்ள எதிர்ப்பால், அதிமுகவின் மீது அதிருப்தி நிலவி வருகிறது.

அதிமுகவினரிடையே நிலவி வரும் போட்டி, திமுகவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Last Updated : Mar 23, 2021, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.