திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் எஸ்பி அலுவலக வளாகத்திலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நேற்று (ஆக.15) கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 10 பயனாளிகளுக்கு, ரூ 15.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 76 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: 75வது சுதந்திர தின விழா - தேசிய கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை