திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா ஏரிதான்டா கிராமத்தைச் சேர்ந்த ரவி (29) என்பவரும், தண்டராம்பட்டு தாலுகா கீழ்பாச்சார் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (34) என்பவரும் பலமுறை கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள்.
இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், அவர்களை தானிப்பாடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதேபோல், திருவண்ணாமலை நகரில் உள்ள கோபுரம் தெருவைச் சேர்ந்த பத்மா (52) என்ற பெண்ணும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுவருவதால் அவரைத் திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பரிந்துரைத்தார்.
அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அவர்கள் மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும் மாவட்டத்தில் இந்தாண்டில் மட்டும் இதுவரை 32 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளச்சாரயம் காய்ச்சினால் குண்டர் சட்டம் பாயும்