திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில் சாராயம் விற்பதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கலால் டிஎஸ்பி பழனி தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர் .
அப்போது, சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வைதீஸ்வரி (27), சரிதா (34), தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (48) ஆகியோர் சாராயம் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் மூவரையும் கைது செய்து 385 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சாராய விற்பனையைத் தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியிலிருந்து 1,100 லிட்டர் சாரயம் கடத்த முயன்றவர் கைது!