திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் யோகா ஆசிரியை கல்பனா. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா கலையைக் கற்பித்து வருகிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு தனது தலைமுடி ஜடையின் மூலம் காரை கயிற்றைக் கொண்டு இணைத்து நீண்ட 400 மீட்டர் தூரம் இழுத்தார்.
திருவண்ணாமலை துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழிப்புணர்வு கார் இழுத்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு யோகா ஆசிரியை கல்பனாவை உற்சாகமூட்டினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்கள் அனைவரும் உத்வேகம் அடைவதற்கும், தங்களால் சாதனைகளும் புரிய முடியும் என்கின்ற நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் அமைந்திருந்தது.
இதையும் படிங்க: வைத்தியநாத சுவாமி கோயில் மாசிமக தேர்த்திருவிழா!