ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் சனி பிரதோஷ விழா கோலாகலம் - அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாதம் சனி பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது. அதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அண்ணாமலையார் கோயிலில் சனி பிரதோஷ விழா கோலாகலம்
அண்ணாமலையார் கோயில் ஐப்பசி மாத சனி பிரதோஷம்...!
author img

By

Published : Oct 23, 2022, 8:14 AM IST

திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று (அக் 22) ஐப்பசி மாதம் சனி பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது.

ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரி நந்திக்கு ஐப்பசி மாத மஹா பிரதோஷ பூஜைகள் செய்யப்பட்டன. பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் 2 தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு மஹா பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம். அதில் சனி மகா பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாகும். நேற்று மாலை 4.30 மணியளவில் பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள், தூள் அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து நந்திபகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் காட்டப்பட்டது. பிரதோஷ தினத்தின் போது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மீசையில் படாமல் கூழ்குடித்து போராடிய விவசாயிகள் - காரணம் இதுதான்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.