ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவை மீறியர்கள் மீது லத்தி சார்ஜ் செய்த காவல்துறை

திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் மீது காவலர்கள் தடியடி நடத்தியும், தோப்புக்கரணம் போடவைத்தும் தண்டனையளித்தனர்.

thiruvannamalai police given lathi charge who rides on curfew period

author img

By

Published : Mar 25, 2020, 11:37 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதையடுத்து 21 நாள்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைத்து மாவட்ட எல்லைகளும் அடைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆயினும் மக்கள் போதிய விழிப்புணர்வின்றி சாலைகளில் பயணித்து வருகின்றனர். மக்களின் இந்த பொறுப்பற்ற செயல்களைத் தடுக்கும்விதமாக திருவண்ணாமலையில், காவல்துறையினர் சாலையில் தடை நேரத்தில் பயணம் செய்பவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்தும், அவர்கள் மீது தடியடி நடத்தியும் எச்சரித்துள்ளனர்.

லத்தி சார்ஜ் கொடுத்த போலீஸ்

மேலும், சாலையில் பயணித்த சிலரை தோப்புக்கரணம் போடவைத்து, தாங்கள் தேவையற்ற பயணம் மேற்கொள்ளமாட்டோம், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதாக உறுதிமொழி ஏற்கவும் வைத்தனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறிபவர்களை எச்சரிக்க 'தண்டோரா'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.