ETV Bharat / state

மகா தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை! - கிரிவலம், கோயிலுக்கு வர தடை

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் மகா தீபத் திருநாளான நவம்பர் 29ஆம் தேதியன்று கிரிவலம் செல்லவும், பக்தர்கள் கோயிலுக்கு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

thiruvannamalai
thiruvannamalai
author img

By

Published : Nov 13, 2020, 2:38 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா வருகின்ற 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக் காண நாளொன்றுக்கு ஐந்தாயிரம் பக்தர்கள் என ஆன்லைன் மூலம் பதிவுசெய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தீபத் திருவிழாவுக்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து வரும் சிறப்புப் பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 29ஆம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத் திருவிழாவும் கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாருமின்றி நடைபெறும்.

அதேபோன்று வருகின்ற 26ஆம் தேதி நடக்கவிருந்த மகா ரதம், பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மகா தீபத் திருவிழாவையொட்டி பத்து நாள்கள் நடக்கும் திருவிழா கோயில் வளாகத்தினுள்ளே நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: யாரை திருப்திபடுத்த இந்த புத்தகத்தை நீக்கினார்கள்: ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.