திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள வடமாதிமங்கலம் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சாமந்தி என்பவரும், தேமுதிக சார்பில் சத்யா என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு என இடஒதுக்கீடு செய்துவிட்டு, அதிமுக வேட்பாளரை திரும்பப் பெறக்கோரி, அதிமுக நிர்வாகிகளிடம் தேமுதிக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம் நடைபெற்றதையொட்டி காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இரு கட்சி வேட்பாளர்களும் அந்தந்த கட்சியின் சின்னங்கள் பெற்று போட்டியிடுகின்றனர்.
இதனால் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக - அதிமுகவினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று போளூர் ஊராட்சி ஒன்றியம் திரிசூர் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும் அதிமுக - தேமுதிக கட்சியினர் தனித்தனியே போட்டியிடுவதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காற்றை கடனாக விட்டுச் செல்வோம்!