ETV Bharat / state

திருவண்ணாமலையில் கான்கீரீட்டில் தயாராகும் தேரோடும் வீதிகள் : கார்த்திகை தீபம் களைகட்டும் என்கிறார் எ.வ.வேலு - public work department

20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை மாடவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.

cement road in 20 crores spend to encroach road
20 கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
author img

By

Published : Jun 9, 2023, 7:30 PM IST

20 கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

திருவண்ணாமலை: சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு மாடவீதியில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த போது பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தையும் திருவண்ணாமலை மாவட்டத்தையும் மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் நான்கு மாட வீதியில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் போது ஏழாம் நாள் திருவிழாவில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மரத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்த உடன் திருவண்ணாமலையில் திருப்பதிக்கு இணையாக தேரோடும் சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றி அமைக்கப்படும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். அதன் நடவடிக்கையாக தற்போது நான்கு மாட வீதியில், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 20 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட இந்த பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தின் அளித்த வாக்குறுதி பணிகள் தற்போது நடைபெற்று வருவகின்றன. குறிப்பாக பேகோபுர தெருவில் குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த பணிகளும் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. மேலும் குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்க நகராட்சியின் மூலம் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு குடிநீர் இணைக்கும் வகையில் முன்னேற்பாடுகள் விமர்சையாக தொடங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பொதுப்பணித்துறை, மின்சார துறை, நகராட்சி துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருவகின்றன. வரும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதில் பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறும். குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டபடி நடைபெறும் விவரங்களும் மலையை ஒட்டி உள்ள இந்த சாலை மழைக்காலங்களில் மழை நீர் கோவிலுக்குள் செல்வதால் இனி வரும் காலங்களில் மழை நீர் கோயிலுக்குள் செல்லாதவாறு சிமெண்ட் சாலைகள் அமைத்து பாதுகாக்கப்படும்” என இத்திட்டத்திற்கு உறுதியளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் “மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்துள்ளது. குறிப்பாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதாக பாரத பிரதமர் அறிவித்திருந்தார், ஆனால் தற்போது வரை மருத்துவமனையின் பணிகள் தொடங்காததால் தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை கொண்டு வந்து பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பாரதப் பிரதமரால் அறிவிக்கப்பட்ட திட்டம் தமிழ்நாட்டில் வராத போது மற்ற துறைகளின் சார்பில் அறிவிக்கப்படும் எந்த ஒரு திட்டமும் தமிழகத்திற்கு வரப்போவதில்லை. குறிப்பாக பாஜக ஆட்சியினால் திருவண்ணாமலை மக்கள் அடிப்படை வசதிகளுக்குக்கூட மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலையார் கோயிலை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை கையகப்படுத்த போகிறது.

மலை அடிவாரத்தில் உள்ள வீடுகளை காலி செய்து நகருக்கு அப்பால் கொண்டு செல்லப் போவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு திருவண்ணாமலையில் மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரத போராட்டம் என பல போராட்டங்களை நடத்தி அண்ணாமலையார் கோயிலை மீட்டது திமுக ஆட்சியில் தான். இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசு தமிழகத்தையும் திருவண்ணாமலை மாவட்டத்தையும் வஞ்சித்துக் கொண்டுதான் இருக்கிறது” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வன்மையாக சாடினார்.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு.. மத்திய அரசை துணைக்கு அழைக்கும் திமுக - ஈபிஎஸ் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.