ETV Bharat / state

பக்தர்களிடம் சுங்கவசூல் செய்பவர்கள் மீது  குண்டர் சட்டம் பாயும்: மாவட்ட ஆட்சித்தலைவர்.! - சுங்க வசூல் செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் சுங்க வசூல் செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை
thiruvannamalai-festival-time-toll-plaza
author img

By

Published : Dec 1, 2019, 5:04 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் விழா நடைபெறுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் திருவாண்ணாமலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசுகையில், கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களிடம் சுங்க வசூல், ஏல வசூல் என்ற பெயரில் வசூலிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இதுவரை நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாக்களை காட்டிலும் இந்தாண்டு பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்துதரப்படும். இதற்காக 14 சிறப்பு ரயில்கள் 34 மாநிலத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது என்றார்.

பின்னர் நடைபெற்ற வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்வு முகாமில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் 29பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிக்க: திருப்பூர் அருகே பிரபல கோயிலில் சுவரை துளையிட்டு அரங்கேறிய கொள்ளை!

Intro:சுங்க வசூல் செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி.Body:சுங்க வசூல் செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் சுங்க வசூல் செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நாளை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் திருகார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் இன்று திருவாண்ணாமலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, நாளை தொடங்கும் கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களிடம் சுங்க வசூல், ஏல வசூல் என்ற பெயரில் வசூலிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் இதுவரை நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாக்களை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்துதரப்படும் என்றார். இந்த ஆண்டு 14 சிறப்பு ரயில்கள் 34 நடைகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளதாக கூறினார்.

பின்னர் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான மாற்றுத்திறனார்களுக்கான சிறப்பு குறை தீர்வு முகாம் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு 29பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
329 மனுக்கள் பெறப்பட்டது.

Conclusion:சுங்க வசூல் செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.