ETV Bharat / state

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய எஸ்பி பொறுப்பேற்பு! - thiruvannamalai district new sp

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அ. பவன் குமார் ரெட்டி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

thiruvannamalai district new superintendent of police

author img

By

Published : Jun 7, 2021, 8:37 PM IST

திருவண்ணாமலை: மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டி நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் 2016 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து தேசிய காவல் பயிற்சியகத்தில் அடிப்படை பயிற்சி முடித்து, மதுரை மாவட்டத்தில் பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உட்கோட்டத்தில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி முதல் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் திருச்சிராப்பள்ளி மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராக பணியாற்றி, தற்போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.