ETV Bharat / state

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: பிரமாண்ட விழிப்புணர்வு கோலம்! - Thiruvannamalai District Collector visited

மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட மாபெரும் விழிப்புணர்வு கோலத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்
author img

By

Published : Jul 19, 2022, 7:22 PM IST

Updated : Jul 19, 2022, 9:14 PM IST

திருவண்ணாமலை: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

44ஆவது சர்வதேச செஸ்

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் நகராட்சி ஈசான்ய மைதானத்தில் 44ஆவது சர்வதேச செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக மகளிர் சுய உதவிக் குழுவினரால் இன்று (ஜூலை 19) மாபெரும் கோலம் வரையப்பட்டது. அக்கோலத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பிரியதர்ஷினி, நகர மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: வீடியோ: செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை உப்பில் வரைந்த பள்ளி மாணவர்கள்

Last Updated : Jul 19, 2022, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.